News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தற்போது பரவிவரும் 'பன்றிச் சம்பா' எனும் கலப்பின நெற்பயிர்

அம்பாறை மாவட்டத்தில் நெற்பயிர்களிடையே 'பன்றிச் சம்பா' எனும் கலப்பின நெற்பயிரினால் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

'பன்றிச் சம்பா' எனும் இந்த நெல்லினம் நெற்பயிர்களிடையே அதிகமாகப் பெருகி வருவதோடு, இவற்றின் வளர்ச்சியும் அதீதமாக உள்ளமையினால் நெற்பயிர்களின் வளர்ச்சி குன்றிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, நெல் வயல்களிலுள்ள 'பன்றிச் சம்பா'வின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தும் வகையில் - மனித வளங்களைப் பயன்படுத்தி அவற்றினை அறுத்து அகற்றும் நடவடிக்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும், இவற்றின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நெற்பயிர்களிடையே வளரும் களைகளை இல்லாதொழிப்பதற்காக அவற்றுக்கென சிபாரிசு செய்யப்பட்டுள்ள களைநாசினிகளை – தாம் பயன்படுத்தி வருகின்றபோதும், அதற்குரிய பயன்கள் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக நெல் வயல்களில் தற்போது - மஞ்சட்கோரை,நரி மாறத்து மற்றும் குதிரைவாற் புல் போன்றவை பெருகிக் காணப்படுவதாகவும், ஆனால் - இந்தக் களைகளை அழிப்பதற்காகச் சிபாரிசு செய்யப்பட்டுள்ள களைநாசினிகளை தாம் பயன்படுத்தி வருகின்ற போதும், குறித்த களைகள் அழிவடையாமல் தொடர்ந்தும் வளர்ந்து கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக – களைநாசினி உற்பத்தி நிறுவனங்களின் முகவர்களிடம் தாம் முறையிட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .