உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்றவர்கள்தான் தாதியராக வரவேண்டும் என்று இல்லை. கலைத்துறையில் கல்வி கற்றவர்களும் தாதியர் பணி செய்ய விண்ணப்பிக்கலாம். அவர்கள் படிப்பின்; பின்னர் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் சுகாதார மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கை மருத்துவ சங்கம், யாழ்.மருத்துவசங்கத்துடன் இணைந்த பிராந்திய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'வடக்கு கிழக்கில் எந்தப் பாகுபாடுமின்றி வைத்திய சேவைகள் விஸ்தரிக்கப்படும். வடமாகாணத்தில் வைத்தியத் துறையில் ஆளணிப்பற்றாக்குறைகள் நிலவுகின்றன. அதனைத் தீர்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
யாழில் மருத்துவத்துறையில் கல்வி கற்று மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் யாழில் பணியாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் தெரிவித்தார்.
இந்த மருத்துவ பிராந்திய மாநாடு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், யாழ்.பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், இலங்கை மருத்துவ சங்கத்தினர் யாழ்.மருத்துவ சங்கத்தினர் மற்றும் மருத்துவ மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்