சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தவிசாளரும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிறியாணி விஜேவிக்ரம, மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை, உதவி தவிசாளர்,எம்.ஐ.கலீலுர்றஹ்மான் உட்பட திணைக்கள தலைவர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் 2011ஆம் ஆண்டின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக திணைக்களங்கள் வாரியாக ஆராயப்பட்டதுடன் 2012ஆம் ஆண்டின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் இடம்பெற்றன.