சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிரதான வீதியோரங்களில் நிழல் தரும் மரங்களை நடும் வேலைத்திட்டம் 16-01-2012 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
'வீதிக்கு வாசம் ஊருக்கு சுவாசம்' என்னும் தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ் அமைப்பின் தலைவர் ஐ.நாசர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்,தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார்,மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ்.எச்.ஏ.றாசீக், அதிபர் ஹபீறா சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.