News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, 2011/2012 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கென மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, 2011/2012 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கென மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பல்கலைக் கழகங்களுக்கு புதிதாக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். இதற்காக கடந்த வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த மாணவர்களை தமது பெறுபேறுகள், தகுதியடிப்படையில் இதற்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.

விண்ணப்பங்கள் அனைத்து புத்தக நிலையங்களிலும் நேற்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் விண்ணப்பங்கள் கொழும்பு 07, வார்ட் பிளேசிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கு கிடைக்கும் வகையில் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்குமாறும் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .