News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை ஒக்ஸ்போட் ஆங்கில சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பற் சுகாதாரம் தொடர்பான வைத்திய முகாம்

சம்மாந்துறை ஒக்ஸ்போட் ஆங்கில சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பற் சுகாதாரம் தொடர்பான வைத்திய முகாம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 'தேசிய முன் பிள்ளை பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி' வாரத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்மாந்துறை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பஸீலா அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வைத்திய நிபுணர் டாக்டர் சப்னா, உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஐ.தௌபீக்,முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அஹமட், அப்பாடசாலை அதிபர் திருமதி ஜீ.என்.இஸ்மாயீல் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் பற்கள் பரிசோதிக்கப்பட்ட உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன.



Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .