அரசாங்கத்தின் காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் 2008/04ஆம் சுற்று நிருபத்துக்கு அமைவாக முதன் முறையாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை,மல்வத்தை கிராமத்தை சேர்ந்த 123 குடும்பங்களுக்கு காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டீ அல்வீஸ் மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அனூர தர்மதாச, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது காணி கட்டளை சட்டங்கள் தொடர்பாகவும் அதனை கையாழ்வதில் உள்ள சட்ட சிக்கல்கள் தொடர்பாக அதிதிகளினால் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டன.