News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

ஜும்ஆ நேரத்தில் தலைக்கவசம் அணிவதை தளர்வு செய்யுமாறு உலமாக் கட்சி தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!


கிழக்கு மாகாணத்தில் புதிதாக கடுமையாக அமுல்ப்படுத்தப்படும் தலைக்கவசம் அணியும் சட்டத்தில் பள்ளிவாயலுக்கு உள்வீதிகளில் தொப்பி அணிந்து செல்வோர் விடயத்திலும் வெள்ளிக்கிழமையன்றும் சலுகை வழங்குமாறு அகில இலங்கை உலமா கட்சி ஜனாதிபதி, மற்றும் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது சம்பந்தமாக உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவியினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

ல்முனை, அக்கரைப்பற்று போன்ற கிழக்கு மாகாணத்தின் பல முஸ்லிம் பிரதேசங்களில் யுத்த காலத்தில் விடுபட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுணர்கள் தலைக்கவசம் அணியும் சட்டம் தற்போது கடுமையாக அமுல் படுத்தப்படுகிறது. குறிப்பாக உள் வீதிகளிலும் இச்சட்டம் கடுமையாக அமுல்படுத்துவதோடு பள்ளிவாயலுக்கு தொழச் செல்வோரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என பொலிசாரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக வீதி விபத்துக்களை குறைக்க வேண்டுமென்பதற்காக தலைக்கவசம் அணியும் சட்டத்தை அமுல் படுத்துவதில் பொலிசார் தீவிரமாக இருப்பது பாராட்டுக்குரியதுதான். ஆனாலும் சட்டங்களை கிராமங்களில் நடைமுறைப்படுத்தும்போது மனிதாபிமானம் மற்றும் சமயங்களின் கிரியைகளுக்கு மதிப்புத்தருவதும் அவசியமாகும். நமது நாடு சமயம்,கலாச்சாரம் போன்றவற்றிற்கு சட்டத்திற்கப்பால் நின்று மதிப்பளிக்கும் கலாச்சாரம் கொண்ட நாடு என்பதை நாம் மறந்து விட முடியாது.

ஆகவே நமது நாடு மதங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் மதிப்பளிக்கும் நாடு என்ற வகையில் உள்வீதிகளால் தொப்பி அணிந்து பள்ளிவாயல்களுக்கு செல்வோர் விடயத்திலும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணியிலிருந்து 2மணி வரை பிரதான வீதியால் தலைக்கவசம் இன்றி தொப்பி அணிந்து பள்ளிவாயல் செல்வோருக்கும் இது விடயத்தில் சலுகை வழங்க வேண்டுமென தங்களுக்கு 2005ம் ஆண்டு முதல் பகிரங்கமாக ஆதரவளிக்கும் முஸ்லிம் சமயத் தலைவர்களின் ஒரேயொரு கட்சி என்ற வகையில் நாம் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்- என முபாறக் மௌலவி வலியுறுத்தி கேட்டுள்ளார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .