சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியின் மாணவர்கள் விடுதியின் மீதி வேலைகளை பூர்த்தி செய்வதற்காக அம்பாரை மாவட்ட செயலாளர் அவர்களினால் 04 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.
இப்பாடசாலையின் வளப்பற்றாக்குறை மற்றும் பல பிரச்சினைகள் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளருக்குமிடையில் வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இப்பாடசாலையின் மாணவர் விடுதியானது நீண்ட காலமாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது அதனை துரிதமாக பூர்த்தி செய்யும் முகமாகவே எமது மாவட்ட செயலாளர் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதற்க்கு அமைவாக இத்திட்டத்தை செய்து முடிக்க முன்னுரிமை வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரிக்கு பிரதி அதிபர் இல்லாதிருப்பதாகவும் அவற்றை வழங்க வேண்டுமென சபையினர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக சபையினால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தமை குறப்பிடத்தக்க ஒன்றாகும்.