News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

அலிவன்னியர் வீதியானது புனரமைப்பின்றி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அலிவன்னியர் வீதியானது சியா சந்தியிலிருந்து வீரமுனை சந்திவரைக்கும் புனரமைப்பின்றி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


பள்ளிவாசல், பாடசாலை, மையவாடி என்பன அமையப்பெற்றுள்ள இவ்வீதியில் இறந்தவர்களின் உடல்களை மையவாடிக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வீதியில் அதிகமான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் இப்பிரதான வீதியானது சம்மாந்துறை பிரதேசத்தினூடாக மண்டூர் பிரதேசத்துக்கு செல்லும் ஒரு பிரதான பாதை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பாதையை புனரமைத்துத் தருமாறு கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித பயனும் இதுவரைக்கும் கிட்டவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .