உலக நீரிழிவு தினத்தையிட்டு 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் மாபெரும் நீரிழிவு நோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வீதிஊர்வலமும், கண்காட்சி நிகழ்வு, இலவச இரத்தப்பரிசோதனை, இலைக்கஞ்சி வழங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு வைத்தியசாலை முன்றலிலிருந்து வீதி ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சம்மாந்துறை நகர மண்டபத்தை அடைந்து அங்கு கண்காட்சி நிகழ்வு உட்பட ஏனைய அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், உலமாக்கள், நீரிழிவு நேயாளர்கள், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுவதாக அறியமுடிகின்றது. ஆரம்பத்தில் இந்நோய் தொடர்பான அறிவு இல்லாதிருந்த போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்துள்ளது. இந்நோய் தொடர்பாக சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பன வெளியிட்டுள்ள தகவல்களின்படி உலகம் பூராகவும் 366 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேசமயம் உலகம் பூராகவும் 344 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவுத்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் இந்நோயினால் வருடாந்தம் 4.6 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் இதனடிப்படையில் உலகில் 7 செக்கனுக்கு ஒருவர் மரணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இந்நோயிலிருந்து மக்களை பாதுகாக்க வருடாந்தம் 465 பில்லியன் டொலர் செலவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோய்க்கான முன் எச்சரிக்கை மற்றும் அதனைத்தடுக்கும் வழி முறைகள் அடங்கிய இலவச கைநூல் இன் நிகழ்வில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.