News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை பிரயோக விஞ்ஞானபீடத்திற்கான அபிவிருத்திகள் இதுவரையில் இல்லை: உபவேந்தர் இஸ்மாயீல்

1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞானபீடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரையில் எந்தவொரு நிரந்தர அபிவிருத்திகளோ, பல்கலைக்கழகத்துக்கு தேவையான கட்டிடங்களோ மேற்கொள்ளப்படாமலுள்ளது.  இலங்கை நெல் சந்தைப்படுத்தும் சபையினால் அரிசி ஆலைக்காக உருவாக்கப்பட்ட கட்டிடங்களிலேயே உள்ளக மாற்றங்களை செய்து இன்றுவரையில் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞானபீடம் இயங்கி வருகின்றதென இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தெரிவித்தார்.

இதனால் இப்பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் தொடர்பாக இப்பிராந்தியத்திலுள்ள பொதுநல அமைப்புக்கள், பொதுமக்கள், பழைய மாணவர்கள் மத்தியில் சந்தேகங்களும் அச்சமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞானபீடத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் இப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது விசேடமாக சம்மாந்துறையிலுள்ள பிரயோக விஞ்ஞானபீடத்தின் அபிவிருத்திக்காகவும் பண ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .