News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் ஆர்பாட்டம்


தென் கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவியொருவரை நான்கு மாணவர்கள் இணைந்து பகடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் 75 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

குறித்த மாணவர்களை உடனடியாக கல்வி நடவடிக்கையில் உள்வாங்குமாறு கோரிக்கை விடுத்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சம்மாந்துறையிலுள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்னால் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலாம் வருடத்திற்காக புதிதாக அனுமதிக்கப்பட்ட  மாணவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.

புதிதாக முதலாம் வருடத்திற்கு இணைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு சென்ற இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் என்று பல்கலைகழக நிர்வாகத்திற்கு வழங்கிய அநாமதேய தகவலையடுத்தே இந்த வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாணவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பாக எந்தவித விசாரணைகளையும் நடத்தாமலேயே பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை இடைநிறுத்தியுள்ளனர் என அவர்கள் குறிப்பிட்டனர். இதேவேளை, அடுத்த மாதம் பரீட்சை நடைபெறவுள்ள நிலையிலேயே இம்மாணவர்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாணவ பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.




Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .