News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை பொலிஸ் நடமாடும் சேவை - நடைபெற ஏற்பாடு

  சம்மாந்துறை பொலிஸ் நடமாடும் சேவை எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரையில் சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்நடமாடும் சேவையின்போது மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வைத்திய சேவை, முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளல், மூக்குக் கண்ணாடி வழங்கும் சேவை, பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுகள் வழங்கல், மத்தியஸ்;த சபையின் சேவைகள் மற்றும் பாடசாலைமட்ட போட்டி நிகழ்ச்சிகள், பிரதேச செயலகமட்ட வலப்பந்தாட்ட போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், சம்மாந்துறை பிரதேச செயலக அதிகாரிகள், ஊர்பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேற்படி சேவைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் இந்நடமாடும் சேவையில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .