News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை வலய ஆசிரியர் இடமாற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்

”சம்மாந்துறை வலயத்திலிருந்து வெளிவலயங்களுக்கு இடமாற்றப்படும் 43 ஆசிரியர்களது இடமாற்றம் ஒரு வருட நிபந்தனைக்குட்பட்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட வேண்டும்”

இவ்வாறான தீர்மானமொன்றை ஆசிரியர் இடமாற்ற சபை கிழக்கு மாகாண கல்வி அமையமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.மேற்படி இடபெற்ற இக் கூட்டம் வலகல்வி பணிப்பாளர் தலைமையில் 08.11.2011 செவ்வாக்கிழமை வலயக் கல்வி பணிமனையில் இடம்பெற்றது.

சம்மாந்துறை வலயத்தில் 171 ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் 54 ஆசிரியர்கள் வெளிவலயத்திலும் மீதி 117 பேர் வலயத்தினுள்ளும் இடமாற்றப்பட இருந்தனர். எனினும் வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோழுக்கிணங்க வெளிவலயத்திற்கு இடமாற்றம் பெறும் ஆசிரியர்களின் தொகை 43ஆக குறைக்கப்பட்டது.

அதனையடுத்து அவர்களின் பெயர் விபரப்பட்டியல் உடனடியாக மின்னஞ்சலில் அனுப்புமாறு கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டு கொண்டார்.


இடமாற்ற குழுவின் இறுதி நிபந்தனையாக : வலயக் கல்விப் பணிமனை மாகாண நிதியத்தின்படி புள்ளி அடிப்படையில் நேர்தியாகமேற்கொண்ட இடமாற்றப்பட்டியலை அங்கீகரிப்பதென்று சபை முடிவு செய்துள்ளது.(ஒப்பம், ஒப்புதல் இடம்பெற்றது)

இன் நிகழ்வில் கலந்த கொண்ட சம்மாந்துறை கல்வி அபிவிருத்தி சங்கம்,நம்பிக்கையாளர் சபை,பிரதேச சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தேசிய தலைவர் M.அனஸ், இலங்கை தமிழர் அசிரியர் சங்கத் தேசிய தலைவர் V.T.சகாதேவராஜா, இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்க தேசிய தலைவர் A.P. கமல்டீன் ஆகிய தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .