News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கரப்பந்தாட்ட போட்டியில் நிந்தவூர் மதினா விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சினேகபூர்வ கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி சனிக்கிழமை சம்மாந்துறை அல் - மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகம், சம்மாந்துறை யுனிட்டி முபோ விளையாட்டுக் கழகம், சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகம்; ஆகிய மூன்று அணிகள் பங்கு கொண்டன.

இதன் இறுதி போட்டியில் சம்மாந்துறை யுனிட்டி முபோ விளையாட்டு கழகம் மற்றும் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகம் ஆகியன மோதின. இதில்  நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கி கொண்டது.





Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .