வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என கொழும்புமேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு ரூ5000 அபராதமும் மூன்று வருடகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் சிறைத்தண்டனை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படும் எனவும் மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.