News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறைக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அரசுக்கு நன்றி தெரிவிப்பு


இலங்கை முஸ்லிம்கள் 7ம் திகதி திங்கட்கிழமை புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு அத்தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியிருப்பது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடவிருக்கும் விடயத்தை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அத்தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியிருக்கின்றது. அதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

மேற்படித் தகவலை உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. அஹ்மத் முபாரக் தெரிவித்தார்
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .