News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

கிழக்கில்-நெல்சிப் திட்டத்திற்கு 5004 மில்லியன் ஒதுக்கீடு



கிழக்கு மாகாணத்திலே சுமார் 5004 மில்லியன் ரூபா நிதி நெல்சிப் திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலே மேற்படி திட்டம் தற்போது நடைமுறையில் இருக்கின்றது. 

விசேடமாக அம்பாறை மாவட்டத்திலே குறிப்பாக தமிழ் பிரதேச செயலகப் பிரிவுகளிலே மேற்படி நெல்சிப் திட்டமானது மிகவும் மந்தகதியிலே செல்கின்றது. 

இதனைக் கருத்திற் கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்படி திட்டம் தொடர்பான முன்னேற்ற விசேட கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார். 

மேற்படி கூட்டமானது ஆலயடிவெம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் ஆலயடிவெம்பு, திருக்கோவில், காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபைகளினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து பல ஆலோசனைகள் உள்ளுராட்சி அமைச்சரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் வழங்கப்பட்டது. 

ஆலயடிவெம்பு பிரதேச சபைக்கு இவ்வான்டிற்காக நெல்சிப் திட்டத்தின் கீழ் 94 மில்லியன் ரூபாவும், திருக்கோவில் பிரதேச சபைக்கு 102.6 மில்லியன் ரூபாவும், காரைதீவு பிரதேச சபைக்கு 88.88 மில்லியன் ரூபாவும் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு 92.79 மில்லியன் ரூபாவும் இவ்வருட செயற்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

மேற்படி செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்துமே உள்ளுராட்சி மன்றங்களினூடாகவே அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது அம்பாறை மாவட்டத்திலே அதுவும் விசேடமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமைக்குட்பட்ட பிரதேச சபைகளிலே மிகவும் மந்தகதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை விரைவுபடுத்துவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டு அதற்கான வழிகளும் முன் மொழியப்பட்டன. இவ் விசேட முன்னேற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் து.நவரெட்னராஜா, பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்பராஜா,எஸ்.செல்வராஜா, முதல்வரின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், ஆலயடிவெம்பு பிரதேச தவிசாளர் இரத்தினவேல், நாவிதன்வெளி பிரதேச தவிசாளர் கலையரசன், காரைதீவு பிரதேச தவிசாளர்,திருக்கோவில் பிரதேச தவிசாளர், மற்றும் பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டார்கள். 
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .