2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வரவு - செலவுத் திட்டப் பிரேரணையை இன்று பிற்பகல் பாராளுமன்றில் சமர்பிக்கவுள்ளார்.
இதன்படி பிரேரணை மீதான விவாதம் நாளைமுதல் இடம்பெறவுள்ளது.
வரவு - செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 31ம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
பின்னர் டிசம்பர் 1ம் திகதி தொடக்கம் 17ம் திகதிவரை குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
மேலும் 2012ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு இடம்பெற்றதன் பின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 21ம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை இன்று ஜனாதிபதியால் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ள வரவு - செலவும் திட்டம் மாலைவேளையில் அமைச்சரவைக்கும் சமர்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.