News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

எட்டு வருடங்களுக்கு மேல் சேவையாற்றியோர் இடமாற்றப்படுவர்

சம்மாந்துறை வலய இடமாற்ற சபையில் தீர்மானம்

வலயத்தில் எட்டு வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர் யாவரும் இடமாற்றத்துக்குள்ளாவர். எனினும் 52வயதிற்குட்பட்டோர் கோட்ட மட்டத்திலும் இடமாற்றபடுவர்.

இத்தீர்மானம் சம்மாந்துறை வலய ஆசிரியர் இடமாற்ற சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. .இக் கூட்டத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் வலயக்கல்வி பணிமலையில் நடைபெற்றிருந்தது.

ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் கணிக்கப்படுவர். க.பொ.த (சா/த) (உ/த) வகுப்புக்களுக்கு பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர் வீதம் கணிக்கப்படுவர். இரண்டிற்கு மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் ஒரு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய நேரிடின் அது நடைமுறைப்படுத்தப்படும்.

சம்மாந்துறைக் கோட்டத்தில் புள்ளி அடிப்படையில் 40 வயதிற்கு குறைந்த பெண் ஆசிரியர்களும் 45 வயதிற்கு குறைந்த ஆசிரியர்களும் இறக்காமம்/நாவிதன்வெளி கோட்டத்தில் போக்குவரத்து வசதியுடைய பாடசாலைகளுக்கு இடமாற்றப்படுவர்.

வலயத்தில் மேலதிகமாகவுள்ள விஞ்ஞான ஆசிரியர்களை கணிதம், தகவல் தொழில்நுட்பம் பாடங்களைக் கற்பிப்பதற்கு பிரதியீடு செய்தல். இடமாற்றத்தின் போது வைத்திய சான்றிதழ் சமர்ப்பித்து மேன்முறையீடு செய்தால் அவரை வைத்திய சோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஆரம்ப பிரிவுகளில் 200மாணவர்களுக்கு மேல் இருந்தால் மேலதிக ஆசிரியர் ஒருவர் ஆளணியில் சேர்க்கப்பட்டு கணிக்கப்படுவர்.

பிரசவ லீவு தொடர்பாக ஏற்படும் வெற்றிடங்களுக்கு தற்காலியமாக பதிலீடு செய்யப்படும்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .