முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. முஸ்லிம் பெண்கள் ‘பர்தா’ அணிந்த நிலையில் அடையாள அட்டைக்காக படம்பிடிக்க முடியும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர அறிவித்துள்ளார்.
இதன் படி இனிமேல் முஸ்லிம் உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய முஸ்லிம்களும் தலையை மூடிய நிலையில், நெற்றியோ, காதோ மறையாதவாறு புகைப்படம் பிடிக்க அனுமதி வழங்குவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.