News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 2011










சிறுவர்கள் தொடர்பான உருமைகளையும் அவர்களுக்கான சலுகைகளையும், வழங்க வேண்டும் என்ற தொனிப்பொருளினை கருத்திணை சிறுவர்கள் மத்தியில் உயிர்ப்பிக்கும் நோக்குடன் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகமும்,இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வு 02.10.2011 வெகு விமர்சையாக சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்றிருந்தது.

இதில் பிரதேசத்தில் காணப்படுகின்ற அணைத்து பாடசாலை சகல மாணவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டு பல்வேறுபட்ட கலை,கலாசார நிகழ்வுகளுடன் பங்குபற்றியிருந்தனர்.

காலை 9மணியளவில் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில் பிரதம அதீதிகளாக  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராஜா,கிழக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளர் என்.ஏ.புஷ்பகுமார தற்போதய தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாட் , கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியை பெற்ற தாறுல் உலும் மாணவன் எம்.ஏ.முப்லி அஹமட் ஆகியோர் திகழ்வின் சிறப்பு அதீதிகளாக கலந்துகொண்டனர்.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியை பெற்ற தாறுல் உலும் மாணவன் எம்.ஏ.முப்லி அஹமட் கலந்து கொண்டிருந்தான்.


இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய பாடசாலை மாணவ,மாணவியர்களின் ஆக்கங்கள் பேச்சு,கவிதை,கஸீதா என்பன மேடைஏற்றப்பட்டடிருந்நது.மேலும் சிறுவர் தின நிகழ்வுகள் அணைத்தும் Fm96.1Mzh அலைவரிசையினுhடாக நேரடியான அஞ்சல் செய்யப்பட்டிருந்தது.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .