கிழக்கு பல்கலைகழகத்தின் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி விவசாய பீட மாணவர்களுக்கும், 05ஆம் திகதி சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கலை,கலாசார,வர்த்தக முகாமைத்துவ விஞ்ஞான பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை இப்பல்கலைகழகத்தில் விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்களின் பீடங்களுக்கான விரிவுரைகள் ஆரம்பிக்கப்படும் தினத்திற்கு முன்னதாக சமுகளிக்குமாறு கேட்கப்பட்பட்டுள்ளனர்.