News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

வளத்தாப்பிட்டி தாக்குதல் சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட நால்வர்.

வளத்தாப்பிட்டி தாக்குதல் சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றபோது நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகசபை முன்னிலையில் வளத்தாப்பிட்டி சம்பவம் தொடர்பாக அடையாள அணிவகுப்பு காலை (07.09.2011) 11.00 மணியளவில் நடைபெற்றது.

வளத்தாப்பிட்டி மக்கள் சார்பில் பிரபல சட்டத்தரணியும் சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினருமான எஸ்.எம்.முஸ்தபா ஆஜராகியிருந்தார். அடையான அணிவகுப்பில் நான்கு சந்தேக நபர்கள் சாட்சிகளால் அடையாளங்காணப்பட்டனர். பின்பு மன்றில் வழக்கு இடம் பெற்ற போது சட்டத்தரணி முஸ்தபா சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்குமாறு வாதாடினார்.இறுதியில் நீதிவான் ஆனந்தி கனகசபை ஒன்பது பேரை சரீரப்பிணையில் விடுதலை செய்தனர்.

வளத்தாப்பிட்டி மர்ம மனிதன் விவகாரத்தில் பொலிஸாரையும்,பொலிஸ் வாகனத்தையும், சாட்சிகள் மூவரையும் தாக்கிமை தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ்ஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அதன்படி வளத்தாப்பிட்டி இளைஞர்கள் 10பேர் கைது செய்யப்பட்டு 9 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.கடந்த 2ம் திகதி வெள்ளிக்கிழமை அடையாள அணிவகுப்புக்கு நிதிவான் ஆனந்தி கனகசபை உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அன்றைய தினம் சாட்சிகள் மூவரும் கொழும்பிலிருந்து வராத காரணத்தினால் அடையாள அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .