சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத்தீன் அழைப்பை ஏற்று 30.09.2011ந் திகதி வெள்ளிக்கிழமை சம்மாந்துறைக்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாண சுகாதார, கூட்டுறவுத் துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் , தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புணரமைப்பு செய்யப்பட்ட சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுக் கூட்டுறவுச் சங்க களஞ்சியசாலைத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஏ.ஏ.பாவா தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு விழாவில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் ஆகியோர் கொளரவ அதீதிகளாகவும் கலந்து கொண்டனர்.