News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தில் 81மாணவர்கள் சித்தி.

சம்மாந்துறை வலயத்தில் 81மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றிருப்பதாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.மிகவும் பின் தங்கிய நலிவான இறக்காமம், நாவிதன்வெளி கோட்டங்களை உள்ளடக்கிய சம்மாந்துறை வலயத்தில் அதிகூடிய 184 புள்ளியை சம்மாந்துறை தாறுல் உலும் மாணவன் முப்தி அகமட் பெற்றுள்ளான். சம்மாந்துறைக் கோட்டத்தில் 62 மாணவர்களும், இறக்காமம் கோட்டத்தில் 11 மாணவர்களும், நாவிதன்வெளிக் கோட்டத்தில் 08மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.

வலயத்தில் சம்மாந்துறைக் கோட்டத்தைச் சேர்ந்த சம்மாந்துறை தாறுல்உலும் வித்தியாலய மாணவன் எம்.ஏ.முப்தி அகமட் 184புள்ளியை பெற்று வலயத்தில் முதலிடத்தில் திகழ்கிறார்.

சம்மாந்துறைக் கோட்டத்தில் முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் 19மாணவர்களும், சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலையில் 13மாணவர்களும்,தாறுல் உலும் வித்தியாலயத்தில் 07மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.

சித்தி பெற்ற மாணவர்களை வலயக்கல்விப்பணிப்பாளர் மன்சூர் பாராட்டியதுடன் கற்பித்த ஆசிரியர்,பெற்றோர்களுக்கும் வாழ்த்தியுள்ளார்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .