News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஐஸ்கீறிம் உட்கொண்ட 30பேர் திடீர் சுகவீனம்

 அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஐஸ்கிறீம் உட்கொண்ட சுமார் 30 பேர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வயிற்றோட்டம், வாந்திபேதி, காய்ச்சல்  ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களில் 22 சிறுவர்கள் அடங்குவதாகவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம்.தாசீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை இவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.வானில் வந்த ஐஸ்கிறீமை இவர்கள் வாங்கி உட்கொண்டதாகவும் இதன் பின்னர் இவர்கள் திடீரென்று சுகவீனடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஐஸ்கிறீம் உற்பத்திச் தொழிற்சாலைக்கு விரைந்த அட்டாளைச்சேனை சுகாதார அதிகாரிகள் அத்தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .