சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட வளத்தாப்பிட்டி விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த மாதிரி பாற்பண்ணை அண்மையில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
அமைப்பின் தலைவர் எம்.குருநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி மிருகவளர்ப்பு கிராமிய பொருளாதார அமைச்சர் ரீ.நவரட்ணராஜாவும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் எஸ். புஷ்பராஜா,எஸ்.செல்வராஜா ஆகியோரும் சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறை, தொகுதி அமைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட், ஐ.ஓ.எம்.நிறுவனத்தின் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் கே.ரமேஸ், மாவட்ட மிருக வைத்தியத்துறைப் பணிப்பாளர் எம்.சீ.எம்.ஜுனைட், மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஹரீஸ், பிரதேச மிருக வைத்தியர் குமுது லக்மால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.