4000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து கல்வியமைச்சு விண்ணப்பங்களைக் கோரவுள்ளது. எதிர்வரும் ஞாயின்று இவ்விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களாக 3000 பட்டதாரிகள் சேர்க்கப்படவுள்ளதாகவும் மேலும் 1000 பேர் அதிபர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தமிழ் மிரரின் சகோதர ஊடகமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
1000 பாடசாலைகள் திட்டத்தின்கீழ் நவீனமயப்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு மேற்படி 4000 ஆசிரியர்களும் அதிபர்களும் நியமிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.