ஹிஸ்புல்லாஹ், தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தனது பணிகளை உத்தியோகபூர்வமாக நேற்று (02) ஆரம்பித்தார்.
பின்னர் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர், அமைச்சின் செயற்பாடுகளை வழமைபோன்று மேற்கொள்ளுமாறு, பணிப்புரை வழங்கியிருந்தார்.
அத்துடன், ஏற்கெனவே இந்த அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவ்வாறே மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
source : TM
Post a Comment