News Update :

FollowNewsstr SEND 40404

WorldCup 2015

WorldCup 2015

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>> தேசிய அரசாங்கம் ஓர் நேரக் குண்டாகும்: மஹிந்த ராஜபக்ச **** இந்திய மாம்பழத்தை சோதனை செய்ய வருகிறது இங்கிலாந்து **** வியாபாரத்திற்கான Skype மென்பொருளின் Technical Preview**** சாதாரண பயணிகள் விமானத்தில் சீனா சென்றார் மைத்திரி! **** படைவிட்டோடிகளுக்கு பொது மன்னிப்பு! ****ராஜித சொல்லும் அளவு என்னிடம் வாகனங்கள் இல்லை - மஹிந்த****
<>உங்கள் செய்திகளையும் எமக்கெனுப்ப : info@sammanthurai.net சம்மாந்துறை மண்ணின் கலை,கலாசாரம்,பாரம்பரியம்,பண்பாடு வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும் சம்மாந்துறை மண்ணின் இணையத்தளம்.www.sammanthurai.net

ads

ads

எமது செய்திகளை கைத்தொலைபேசி மூலம் பெற

Moto GP News

விளையாட்டு

டெங்கு ஒழிப்பு சிரமதான வாரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் “டெங்கு ஒழிப்பு சிரமதான வாரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு” 23.03.2015 சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சம்மாந்துறை கல்லரச்சல் பிரதேசத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சிரமதானத்தை ஆரம்பித்து வைத்தார்.

சம்மாந்துறைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராமிய அபிவிருத்திச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஏ.ஹுசைன்தீன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன், அம்பாரை மாவட்ட கிராமிய அபிவிருத்திப் பணிப்பாளர் கே.அருண்தவராஜா, அம்பாரை மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலிலுர்றகுமான் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மாகாண அமைச்சர் மன்சூர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச்சிரமதான நிகழ்வில் அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்டு செயற்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

நாமெல்லாம் சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதற்காக இன்று அரசாங்கம் பல வழிகளில் நிதிகளை ஒதுக்கி, பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டாலும், நாம் அந்த விடயங்களில் அக்கரை கொள்ளாத வரையில் எந்தப் பிரயோசனமும் இல்லை. பிள்ளைகளுக்குப் பாடசாலை இலவசம்!, உணவு இலவசம்! சீருடை இலவசம்! கற்பிக்கின்ற ஆசிரியருக்கு அரசாங்கம் சம்பளம் வழங்குகின்றது என்றாலும், பாடசாலைக்குப் பிள்ளையை யார் அனுப்புவது? நாங்கள் தான் அனுப்ப வேண்டும். அது இல்லாமல் அரசாங்கம் வீடு தேடி வந்து ஒவ்வொரு பிள்ளையையும் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாது. எனவே நமக்காக அரசு என்னதான் செய்தாலும், அதன் பயனை, அதன் நோக்கத்தை நாம் உணர்ந்து செயற்படாத வரையில் எந்தப் பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை” என அமைச்சர் தெரிவித்தார். 

தேசிய அரசாங்கம் ஓர் நேரக் குண்டாகும்: மஹிந்த ராஜபக்ச

தேசிய அரசாங்கம் என்பது ஓர் நேரக் குண்டாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாரஹன்பிட்டியில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் என்கிறார்கள், கூட்டணி அரசாங்கம் என்கிறார்கள். எனினும், இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும் குழப்பமாக உள்ளது.

மத்திய வங்கியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது.

தேசிய அரசாங்கம் என்ற நேரக் குண்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கையில் எடுத்தக்கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வரலாற்றில் நாம் பாரிய தவறுகளை இழைத்துள்ளோம். அதனை இல்லை என்று சொல்லவில்லை. பௌத்த பிக்குகள் கூறியதனைப் போன்று நாம் குற்றவாளிகளை தண்டிக்கவில்லை.

போரின் பின்னர் நான் வித்தியாசமான ஓர் நிலைப்பாட்டையே கொண்டிருந்தேன். அபிவிருத்திப் பணிகள் பற்றிக் கவனம் செலுத்திய நான் வேறு விடயங்கள் பற்றிய சிந்திக்கவில்லை.

இப்போதுதான் தெரிகிறது நண்பர்கள் யார், விரோதிகள் யார் என்பது. இன்னும் கொஞ்சம் காலம் காத்திருந்தால் ஏனைய விரோதிகளையும் கண்டுகொள்ள முடியும்.

சுதந்திரக் கட்சி என்பது டார்லி வீதியில் அமைந்துள்ள அலுவலகமோ அல்லது கை சின்னமோ கிடையாது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு பண்டாரநாயக்க குடும்பத்தினர் எத்தனை தடவை வெளியேறியிருக்கின்றார்கள்.

ஒட்டுமொத்த குடும்பத்திற்கு எதிராகவும் தற்போது பொய்யான குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். எமது குடும்பத்தில் ஒருவரையேனும் கைது செய்ய முயற்சிக்கப்படுகின்றது.

நாமல் ராஜபக்சவின் பெயரை குறிப்பிடுமாறு சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார்.


இதுவே இன்று நடைபெறும் நல்லாட்சியாகும். அரச ஊடகங்கள் மிக மோசமாக அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படத் தொடங்கியுள்ளன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய மாம்பழத்தை சோதனை செய்ய வருகிறது இங்கிலாந்து

மாம்பழ ஏற்றுமதிக்கான தடையை நீக்க ஐரோப்பிய நிபுணர்கள் இந்தியா வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்கள் அடங்கிய சில பெட்டிகள் பாதிக்கப்பட்டது பிரஸ்ஸல்சில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதம் முதல் மாம்பழ ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.


இந்தத் தடை உத்தரவினால் இந்திய மாம்பழ வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் திவாலாகும் நிலைமையில் உள்ளனர். இங்கிலாந்தின் வர்த்தகமும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இந்தத் தடை அடுத்த ஆண்டு வரை தொடர்ந்தால் இது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகளை சீர்குலைக்கும்.

இந்தத் தடை உத்தரவு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை உத்தரவை விலக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உறுப்பினரான கீத் வஸ் பெரும் முயற்சி செய்து வருகின்றார்.


கடந்த புதன்கிழமை அன்று பிரஸ்ஸல்ஸ் சென்றிருந்த அவர் இந்தத் தடை விஷயமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாயத்துறை கமிஷனரான டசியன் சியலோசையும் மற்ற மூத்த அதிகாரிகளையும் சந்தித்தார். இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழு வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வர ஒப்புதல் அளித்துள்ளது.

வியாபாரத்திற்கான Skype மென்பொருளின் Technical Preview

Microsoft நிறுவனம் Office 2016 பக்கேஜின் Preview பதிப்பினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ள அதேவேளை skype மென்பொருளின் Technical Preview பதிப்பினையும் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
Skype Application மூலம் 300 மில்லியன் மக்கள் தமது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுகின்றனர்.


தற்போது,சில விசேட அம்சங்களை உள்ளடக்கி வியாபார நிறுவனங்களின் தொடர்பாடலுக்கு ஏற்றவாறு தனியான மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் சோதனைப் பதிப்பாகவே Technical Preview வெளியிடப்படவுள்ளது.

சாதாரண பயணிகள் விமானத்தில் சீனா சென்றார் மைத்திரி!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளனர். 

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த பயணத்தில் இந்தியா சென்றது போன்று இம்முறையும் பயணிகள் விமானத்தில் சீனா நோக்கிச் சென்றுள்ளார். 

யு.எல்.868 என்ற சாதாரண பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (25) பகல் 1.30 அளவில் சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்றுள்ளனர். 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின் சீனாவிற்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இது வென்பது குறிப்பிடத்தக்கது.

படைவிட்டோடிகளுக்கு பொது மன்னிப்பு!

படைவிட்டோடிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் முப்படைத் தளபதிகளின் அனுமதிக்கு அமைய இவ்வாறு பொது மன்னிப்பு வழங்க மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இந்த செயலை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.


பாதுகாப்பு அமைச்சில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஜனாதிபதியின் இத்தீர்மானம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர்களை கடந்த அரசாங்கம் தேடி பிடித்து கைது செய்து வந்த நிலையில் புதிய அரசாங்கம் அவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் குறித்த வீரர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் 16ம் திகதி வரையிலான காலப்பகுதியில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.


பிரதான நான்கு முறைகளின் அடிப்படையில் படைவிட்டோடிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படவுள்ளது.

ராஜித சொல்லும் அளவு என்னிடம் வாகனங்கள் இல்லை - மஹிந்த

தன்னிடம் 5 வாகனங்களே உள்ளதாகவும் ஆனால் அதற்கு மேல் வாகனங்கள் வைத்திருப்பதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆறு வாகனங்களும் 213 பொலிஸ், இராணுவ வீரர்களும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு நீதிமன்ற தீர்ப்பு படி குறைந்த வாகனமும் குறைந்த பாதுகாப்பும் வழங்கப்பட்டதாக ராஜித தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று நாராஹென்பிட்டியவில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட ஶ்ரீசுக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, நீதிமன்றம் சந்திரிக்காவிற்கு மாத்திரமே தீர்ப்பு வழங்கியதாகக் கூறினார். 

இதேவேளை, இரத்தினபுரியில் இடம்பெறவுள்ள மஹிந்த ஆதரவு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, ஜானக வக்கும்புர, ரஞ்சித் சொயிசா, ரொஷான் ரணசிங்க, ஜானக பண்டார, உதித் லொக்குபண்டார ஆகியோர் 

வினோதம்

Comments

அறிவியல்

தொழில்நுட்பம்

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .